ADDED : ஜன 30, 2014 04:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நமக்கு துணை செய்யும் ஆன்மிக சக்தி ஒன்று இருக்கிறது. அதுவே நம்மை வழி நடத்துகிறது.
* நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும் மிகவும் அவசியமானவை.
* சில சமயத்தில் தனி ஒருவரின் வாழ்க்கை, பூமியின் விதியையே நிர்ணயிக்கிறது.
* கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கருவியாக இருங்கள். அதைவிடச் சிறந்தபேறு வேறில்லை.
* மாவில் கலக்கும் உப்பு போல, உயிர்கள் மண்ணோடு மண்ணாகி விடும். அதனால், எப்போதும் நல்லதை மட்டும் சிந்திக்க வேண்டும்.
- அரவிந்தர்